தேசியப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: மஹிந்த
நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபத மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். லஞ்ச ஊழல் மோசடிகள், பொய், வீண்...


நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபத மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஊழல் மோசடிகள், பொய், வீண் விரயம் ஆகியனவற்றை இல்லாதொழித்து நாட்டு மக்களுக்கும் தேசியப் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளித்து செயற்பட உள்ளேன் என்பதனை மக்களின் முன்னிலையில் ஆணையிட்டு கூறுகின்றேன்.
எனது வேட்பாளர்கள் மக்கள் முன்னிலையில் அளிக்கும் உறுதிமொழிகளை அதேவிதமாக நிறைவேற்றுவார்கள்.
அனைவரும் அமைதியான ஓர் பொதுத் தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எமது மக்கள் பிரதிநிதிகள் உரிய முறையில் தமது கடமைகளை ஆற்றுவார்கள் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ச வேட்பு மனுத் தாக்கல் செய்ததன் பின்னர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குருணாகல் மாவட்டத்தில் மஹிந்த தலைமையில் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் அனுர பிரியதர்சன யாப்பா, ரீ.பி. ஏக்கநாயக்க, சாலிந்த திஸாநாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சாந்த பண்டார, அனுர விஜேசிங்க, தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.