சர்வாதிகாரம், ஊழல்களுக்கு எதிரான போராட்டம் தொடரும்: சம்பிக்க
தாம் தொடர்ந்தும் சர்வாதிகாரம் மற்றும் ஊழல்களுக்கு எதிராக போராடப் போவதாக நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரண...


தாம் தொடர்ந்தும் சர்வாதிகாரம் மற்றும் ஊழல்களுக்கு எதிராக போராடப் போவதாக நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
சுயாதீனமாக சிந்தித்தே நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிட முன்வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், இதன்மூலமே நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் ஏற்படுத்த முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.