உலகக் கிண்ணம்: ஒரு பந்து கூட வீசாமல் போட்டி இரத்து
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 11–வது ‘லீக்’ ஆட்டம் அவுஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேனில் இலங்கை நேரப்படி இன்று காலை 09.00 மணியளவில் தொடங்...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_504.html
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 11–வது ‘லீக்’ ஆட்டம் அவுஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேனில் இலங்கை நேரப்படி இன்று காலை 09.00 மணியளவில் தொடங்க இருந்தது.
அவுஸ்திரேலியா – பங்களாதேஷ் அணிகள் மோத இருந்த இந்த போட்டி, மழை குறுக்கிட்டதால் பாதிக்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மார்சியா புயல் கடுமையாக தாக்கியது. இதனால் அங்கு கடந்த 3 தினங்களாக பலத்த மழை பெய்தது. இந்த மழையால் இன்றைய போட்டியைத் தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது.
மழை பெய்து வருவதால் குறித்த ஆட்டத்தை 20 ஓவர்களாக குறைத்து நடத்தவும் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கான அறிகுறிகள் இல்லாததால் போட்டி இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் இரத்தானது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
அவுஸ்திரேலியா தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது. 2–வது ஆட்டம் மழையால் இரத்தானதால் அந்த அணி மிகுந்த ஏமாற்றம் அடைந்தது.
3–வது ஆட்டத்தில் நியூசிலாந்தை 28–ம் திகதி ஆக்லாந்தில் சந்திக்கிறது. பங்களாதேஷ் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. 3–வது போட்டியில் அந்த அணி இலங்கையை 26ம் திகதி எதிர்கொள்கிறது


Sri Lanka Rupee Exchange Rate