மஹிந்தவின் காலம் முடிவடைந்து விட்டது: அகில விராஜ்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலம் முடிவடைந்து விட்டதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிய...


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலம் முடிவடைந்து விட்டதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்டத் தலைவர் நான். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் மஹிந்த ராஜபக்ச.
எனது வாழ்நாளில் நான் ஒருபோதும் மஹிந்தவுடன் பொதுத் தேர்தலில் போட்டியிட நேரிடும் என கருதவில்லை. வீழ்ச்சி ஏற்பட்டு விட்டால் அதனை யாராலும் தடுக்க முடியாது.
வளர்ச்சி ஏற்பட்டாலும் அப்படித்தான். மஹிந்தவின் காலம் முடிவடைந்துவிட்டது.
தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டினாலும் மஹிந்த இங்கு இருப்பாரா? நாம் தானே இந்த மாவட்டத்தில் இருக்கப் போகின்றோம்.
மஹிந்த ராஜபக்சவின் அரசியல் நாடகத்தின் இறுதிக் காட்சிகள் குருணாகலில் அரங்கேற்றப்பட உள்ளது.
மிகவும் கஸ்டப்பட்டு குருணாகலில் அவர் இந்த நாடகத்தை நடிக்க உள்ளார் என அகிலா விராஜ் காரியவசம் மஹாவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.