மைத்திரியை எச்சரிக்கும் சந்திரிக்கா, ஹிருணிகா!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அடாவடித்தனங்களை செய்த எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. இ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_968.html

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அடாவடித்தனங்களை செய்த எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கைக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க எதிர்த்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறிலங்கா சுதந்திர கட்சியிலிருந்து 26 பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததுடன், அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக்கொண்டனர்.
இதில் எஸ்.பி. திஸாநாயக்க கிராமிய அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் திஸாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவி வழங்கியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சந்திரிக்காவை நிர்வாணமாக்கி வீதியில் ஓட விடுவதாக திஸாநாயக்க சூளுரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, திஸாநாயக்கவை மீண்டும் தேசிய அரசாங்கத்தில் அமைச்சராக நியமித்தமையை மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிகா கண்டித்துள்ளார்.
தம்மை பொறுத்தவரை பெண்களை மதிக்கத் தெரியாதவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டியவர்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்பார்த்தவை நடக்காது போனால் தாம் உட்பட்ட ஒவ்வொருவரும் அரசாங்கத்தில் இருந்து விலக தாமதிக்க மாட்டார்கள் என ஹிருனிகா எச்சரித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate