நிமல் சிறிபால எதிர்க்கட்சி தலைவராக நீடிக்க முடியுமா? சபாநாயகர் தீர்மானிப்பார்! - எனக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது!– சபாநாயகர் ஸ்ரீலங்க...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_792.html

நிமல் சிறிபால எதிர்க்கட்சி தலைவராக நீடிக்க முடியுமா? சபாநாயகர் தீர்மானிப்பார்! - எனக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது!– சபாநாயகர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக மாறியுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சி தலைவராக இருக்க முடியுமா? என்பது தொடர்பில் சபாநாயகர் தமது முடிவை அறிவிக்கவுள்ளார்.
நிமல் சிறிபால டி சில்வா, எதிர்க்கட்சி தலைவராக இருப்பதை எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.
ஜேவிபி, மக்கள் ஐக்கிய முன்னணி மற்றும் தேசிய சுதந்திர முன்னணி என்பன நேற்று இதற்கு எதிராக கருத்துக்களை நாடாளுமன்றத்தில் முன்வைத்தன.
இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் சபாநாயகரின் தீர்மானத்துக்கு தாம் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இதனையடுத்து கருத்துரைத்த சபாநாயகர் தமது இந்த விடயம் தொடர்பில் முடிவெடுக்க அவகாசம் தேவை என்று குறிப்பிட்டார்.
நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது பற்றி எனக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது!– சபாநாயகர்
நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது பற்றி தமக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் அனுரகுமார திஸாநாயக்க, விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்தன மற்றும் பிரதமர் ஆகியோர் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி கடுமையான முயற்சியின் ஊடாக பெற்றுக்கொள்ள வேண்டியதொன்றா?
எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் எனக்கும் சிறிய பிரச்சினையொன்று ஏற்பட்டுள்ளது.
சற்று கால அவகாசம் எடுத்து ஆராய்ந்து எனது நிலைப்பாட்டை அறிவிக்கின்றேன்.
எல்லோரும் எதிர்க்கட்சியினர் எனக் குறிப்பிட்டால் அடுத்து என்ன செய்வது என சபாநாயகர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate