“டோப் கியரில் அடித்து தூக்கிய ரிஷாத் ” நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிகிறது …

பொது வேட்பாளர் மைத்ரியை  ஆதரிப்பதாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் அறிவித்தமை இலங்கை முஸ்லிம்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை அறியமுடிகிறது ...



Untitled

பொது வேட்பாளர் மைத்ரியை  ஆதரிப்பதாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் அறிவித்தமை இலங்கை முஸ்லிம்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை அறியமுடிகிறது . அரசாங்கத்தின் செல்லப்பிள்ளை ,இவருக்கு பைல்கள் உள்ளது முஸ்லிம் காங்கிரஸ் வந்தால் கூட இவர் ஒருபோதும் அரசை விட்டு வெளியே வரமாட்டார் என பலரும் முன்னாள் அமைச்சர் ரிஷாதை விமர்சித்திருந்தனர் .

இவை அனைத்தும் கட்டுக்கதைகள் இலங்கை முஸ்லிம்களுக்காக தான் எதையும் செய்ய பின்னிற்க போவதில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக அரசை விட்டு வெளியேறி தன்னை நீரூபித்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் என பொதுமக்கள் இணைய வழியாகவும் தொலைபேசி வழியாகவும் தமது கருத்துக்களை பரிமாரிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மடவளை நியூஸ் மற்றும் இதர முஸ்லிம் ஊடகங்களில் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் மைத்ரியை ஆதரிப்பதாக அறிவித்த செய்தி வெளியானது  முதல் முகநூல் மற்றும் இணைய பக்கங்களில் வாழ்த்துக்கள் வந்து குவிவதை அவதானிக்கமுடிகிறது.இது தவிர நாட்டின் பல பாகங்களிலும் உள்ள முஸ்லிம்கள் தமது மகிழ்சியை வெளிப்படுத்திவருவதாக எமது பிரதேச செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“ரிஷாத் சமகால முஸ்லிம் அரசியல் தலைவர்களுள்  ஒரு இரும்பு மனிதர்” என்று கூட ஒருவர் பேஸ்புக்கில் கருத்துவெளியிட்டுருந்தமையை அவதானிக்க முடிந்தது.



Related

இலங்கை 1243813564717582941

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item