இலங்கையில் இதுவரை காலமும் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை நடைபெறுகின்ற தேர்தலானது மக்கள் மத்தியில் பெரிதும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம்.



ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற ன் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துகொள்வது அரசுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது.

இந்த நிலைஉறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் நாளுக்கு நாள் பொது அணியியில் கடந்த பத்து வருடங்களாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசுடன் இணைந்து வன்னியில் முதல் அமைச்சரவை அமைச்சர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரான முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன், மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவபரண சேவைகள், கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு என்பவற்றின் அமைச்சராக இருந்து இலங்கையில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்களம் ஆகிய மூவின மக்களுக்கும் இங்கு சொல்ல முடியதளவுக்கு அபிவிருத்திகளை செய்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஓமந்தையூடாக மெனிக்பாமுக்கு வந்த போது அப்போது மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த ரிசாத் பதியுதீன் மக்களுடன் மக்களாக இரவு-பகல் என்று பார்க்காமல் அந்த தமிழ் மக்களுக்கு என்ன உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டுமோ அத்தனை உதவிகளையும் செய்துகொடுத்தார்.

மட்டுமன்றி, தனது அமைச்சுக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கு மர்ததிரமின்றி ஏனைய அதிகாரிகளுக்கும் அந்த தமிழ் மக்களுக்கு தேiவான உதவிகளைச் செய்துகொடுக்குமாறு உத்தரவிட்டார். ஒரு அமைச்சர் என்றில்லாமல் சாதாரன நபரைப் போல மெனிக்பாமில் காலை முதல் நள்ளிரவு வரை அந்த மக்களுடன் நின்று அரசியலுக்கு அப்பால் இருந்து உதவிகளைச் செய்து கொடுத்திருந்தார்.

ஒரு அமைச்சருக்குரிய இருப்பிடம், உணவு, உள்ளிட்ட அடிப்படை தேவைகளை ஒருபுறம் வைத்துவிட்டு ஒரு தந்தையை போல் தமிழ் மக்களின் அத்தனை தேவைகளையும் நிறைவேற்றிக்கொடுத்த இந்த பெருந்தலைவனை எப்படி பாராட்டுவது. அன்று மீள்குடியேற்ற அமைச்சராக இருந்து மக்களுக்கு ஆற்றிவரும் சேவையையும், ரிசாதுடன் மக்களுக்கு இருக்கும் நெருக்கத்தையும்  பார்த்து நடுங்கிப்போன ஜனாதிபதியும், அரசாங்கமும்  ரிசாத் பதியுதீனிடமிருந்து மீள்குடியேற்ற அமைச்சை பறித்தெடுத்தது பாரிய துரோகமாகும்.

கடந்த பத்து வருடங்களாக தான் வகித்த இரு அமைச்சுக்கள் மூலம் இலங்கையின் சகல மாவட்டங்களிலும் வாழும் சிபான்மையினருக்கு மாத்திரமின்றி, பெரும்பான்மையினருக்கும் உதவிகளைச் செய்துள்ள ரிசாத் பதியுதீன் ஒருபோதும் தன்னுடைய தனிப்பட்ட தேவைகளுக்காக இந்த அருசுடன் முரண்பட்டது கிடையாது.

அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் இதுவரை காலமும் ஆதரவு அளித்துவந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தற்போது தனது ஆதரவினை விளக்கியமையும், ரிசாத் பதியுதீனின் வெளியேற்றமும் ஒன்றும் பாரதூரமான விடயம் அல்ல.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அரசின் ஒரு பங்காளிக் கட்சியே தவிர, ஜனாதிபதியின் செல்லப்பிள்ளை என்பதை ஜனாதிபதிக்கு பக்கவாத்தியம் பாடிக்கொண்டிருக்கும் சோனாக்கல் புரிந்துகொள்ள வேண்டும். இன்று அரசை விட்டு வெளியேறியுள்ள ரிசாத் எம்பியை விமர்சிப்பதற்கு அஸ்வர் ஹாஜியாருக்கும், காதர் ஹாஜியாருக்கும் என்ன அருகதையிருக்கிறது.

ரிசாத் எம்.பி பட்ட கஷ்டங்களை நீங்கள் அனுபவித்துள்ளீரா அல்லது அமைச்சராக இருந்து ரிசாத் எம்.பி ஆற்றிய அபிவிருத்திகளில் சொல்லக்கூடிய ஏதாவதும் செய்திருக்கிறீர்களா என்பதை கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். வீட்டில் தொடர்ந்தும் பிரச்சினை. கணவன் மனைவிக்கு எப்போதும் அடி, உதை, சூடு. எவ்வளவு நாளைக்கு மனைவி அதனை தாங்குவாள்.

அநியாயம் தாங்க முடியாமல் என்றோ ஒருநாள் மனைவி வீதிக்கு வருவாள். அதுபோல ராஜபக்ஷ குடும்பம் இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தும் அநியாயத்திற்கு எதிராக உங்களை விட நல்ல பதவி, சுகபோகங்கள், சொகுச வாழ்க்கை என்பவற்றைத் தூக்கியெறிந்துவிட்டு மக்களின் நலனே முதன்மை என்று துணிச்சலாக அரசைவிட்டு வெளியேறியுள்ள முன்னாள் அமைச்சரை விமர்சிப்பதற்கு உங்களுக்கு எந்த அருகதையும் கிடையாது.