விஷவாயு தாக்குதலை நடத்துகின்றனரா ஐ.எஸ் தீவிரவாதிகள்?
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் விஷவாயு தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் சிரியாவின...


உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் விஷவாயு தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் சிரியாவின் ஹசாக்கே என்ற இடத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும், குர்திஷ் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில், துர்நாற்றம் வீசக்கூடிய மஞ்சள் நிற விஷவாயு தாக்குதலை தீவிரவாதிகள் மேற்கொண்டதாக குர்திஷ் படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் சாதாரணமாக தயாரிக்கப்பட்டிருந்ததாக கூறியுள்ளனர்.
இந்த விஷவாயுவால், அப்பகுதி மக்களுக்கு குமட்டலும், கண்கள் மற்றும் தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இது எவ்வகை வாயு என்பது சரியாக தெரியவில்லை எனவும் குர்திஷ் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் குளோரின் அமிலத்தை பயன்படுத்துவதாக குர்திஷ் பாதுகாப்பு கவுன்சில் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.