ஹிட்லர் போல் ‘சல்யூட்’ வைத்த பிரித்தானிய மகாராணி: நாடு முழுவதும் அதிர்ச்சியை கிளப்பிய புகைப்படங்கள்

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தன்னுடைய 6 வயதில், ஜேர்மனி சர்வாதிகாரி ஹிட்லரின் நாசிச வணக்கத்தை செலுத்துவது போல் உள்ள புகைப்படங்கள்,...

heil_hitler_002
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தன்னுடைய 6 வயதில், ஜேர்மனி சர்வாதிகாரி ஹிட்லரின் நாசிச வணக்கத்தை செலுத்துவது போல் உள்ள புகைப்படங்கள், தற்போது வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத் தன்னுடைய 6 வயதில் ஸ்கொட்லாந்தில் உள்ள Windsor அரண்மனையில் தன்னுடைய தாயாரான முதலாம் எலிசபெத்துடன் வசித்து வந்துள்ளார்.
அப்போது அங்குள்ள பூங்கா ஒன்றில் தனது தாயாருடன் ஜேர்மனி சர்வாதிகாரியான ஹிட்லரின் சல்யூட்டை வெளிப்படுத்திய அந்த காலத்திலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
லட்சக்கணக்கான யூதர்களை கொன்ற ஹிட்லரை தலைவராக ஏற்றுக்கொள்பவர் மட்டுமே இதுபோன்ற சல்யூட் அளிப்பார்கள்.
அதே நேரத்தில், நாசிச சல்யூட் வைத்ததாக கூறப்பட்ட காலமான 1933-34-களில் ஜேர்மனியில் ஹிட்லர் ஆட்சி அமைக்கும் சூழல் இருந்து வந்ததால், அதனை பிரித்தானிய அரசு குடும்பம் ஆதரித்து தான் இந்த புகைப்படத்தை வெளியிட்டதாக பரபரப்பு ஏற்பட்டது.

சர்ச்சையை ஏற்படுத்திய இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மகாராணியின் தனிப்பட்ட அறையில் தான் இத்தனை வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த அறைக்கு செல்ல மகாராணி மற்றும் அரசு குடும்பத்தினர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில், இந்த புகைப்படங்களை யார் எடுத்து வெளியிட்டுள்ளது என்ற குழப்பமே தற்போது அரச குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ளது.
தன்னுடைய நெருங்கிய அதிகாரிகளை அழைத்து பேசியுள்ள மகாராணி, இத்தனை வருடங்கள் கழித்து அரசு குடும்பத்திற்கு அவமானம் ஏற்படும் வகையில் புகைப்படங்களை திருடி வெளியிட்டது யார் என உடனடியாக கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், தன்னுடைய தாயாருடன் சேர்ந்து உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளதால், தனது தாயாருக்கும் பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியதற்கு மகாராணி மிகுந்த கோபத்தில் உள்ளதாகவும் பிரித்தானியா பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related

உலகம் 5829936099260198230

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item