றகர் வீரர் தாஜூதீன் விபத்தில் இறக்கவில்லை! – பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

றகர் வீரர் வசீம் தாஜூதீனின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். க...


z_p32-Former-Sunday

றகர் வீரர் வசீம் தாஜூதீனின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-
றகர் வீரர் வசீம் தாஜூதீனின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-
“2012 மே 17 ஆம் திகதி நாராஹென்பிட்டியில் இடம்பெற்ற றகர் வீரர் வசீம் தாஜூதீன் என்பவரின் மரணம் தொடர்பில் நாராஹென்பிட்டி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு விசாரணை ஆரம்பித்தது. இதில் இரண்டு விஞ்ஞானபூர்வ சாட்சிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. முதலாவது பிரேத பரிசோதனை நடத்திய வைத்தியரின் அறிக்கை. இரண்டாவது இரசாயன பகுப்பாய்வாளர்களின் அறிக்கை. இது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் கருத்து கிடைக்கப்பெற்றிருந்தது.
ஆனால் அரச இரசாயக பகுப்பாய்வு அதிகாரியின் கருத்து எமக்கு கிடைக்கப்பெறவில்லை. அது தொடர்பான அறிக்கை 2015 பெப்ரவரி 12ம் திகதியே கிடைத்தது. இரசாயன பகுப்பாய்வாளர் சம்பவம் குறித்து இறுதி முடிவுக்கு வர முடியாது என அறிவித்துள்ளார். ஆனால் மற்றைய அறிக்கையில் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. விசேடமாக உயிரிழந்த நபரின் உடலில் காபன் மொனொக்சைட் வாயு சேர்ந்திருப்பது மரணத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதென தெரியவருகிறது.
இதனால் இது விபத்தினால் ஏற்பட்ட மரணம் அல்ல என்பது சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதியாகிறது. அதனால் இந்த மரணம் குறித்து விசாரணையை நாராஹென்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இருந்து அகற்றி நேற்று தொடக்கம் குற்றத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்க பொலிஸ் மா அதிபர் தீர்மானித்துள்ளார். அதன்படி குற்றத் தடுப்புப் பிரிவினர் பூரண விசாரணை நடத்துவர்” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்

Related

ராஜபக்சவின் சூழ்ச்சிப் பொறியில் நாட்டை மீளவும் சிக்க வைக்கக் கூடாது: சோமவன்ச அமரசிங்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சூழ்ச்சிப் பொறியில் நாட்டை மீளவும் சிக்க வைக்கக் கூடாது என ஜே.வி.பி கட்சியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவி வரும் ஸ்திரமற்ற த...

வித்தியா படுகொலை சந்தேக நபர் தப்பி வந்தமை குறித்து பொலிஸ் உயர் அதிகாரியிடம் விசாரணை

யாழ். ஊர்காவற்றுறை - புங்குடுதீவு பகுதியில் இடம்பெற்ற மாணவி வித்தியாவின் படுகொலை சந்தேக நபர் ஒருவர் கொழும்புக்கு தப்பி வந்தது எப்படி என்பது குறித்து யாழில் உள்ள உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் குற்றப்...

பிரதி அமைச்சர்களாக சனத் ஜயசூரிய உள்ளிட்ட நால்வர் பதவிப் பிரமாணம்

சனத் ஜயசூரிய, விஜய தஹநாயக்க, எரிக் வீரவர்தன மற்றும் திலங்க சுமதிபால ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். இந் நால்வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ம...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item