பிரதி அமைச்சர்களாக சனத் ஜயசூரிய உள்ளிட்ட நால்வர் பதவிப் பிரமாணம்
சனத் ஜயசூரிய, விஜய தஹநாயக்க, எரிக் வீரவர்தன மற்றும் திலங்க சுமதிபால ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்த...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_494.html

இந் நால்வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
பொதுமக்கள் அமைதி மற்றும் கிறிஸ்தவ விவகார பிரதி அமைச்சராக விஜய தஹநாயக்கவும், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சராக சனத் ஜயசூரியவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திறன்விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சராக திலங்க சுமதிபால பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சராக எரிக் பிரசன்ன வீரவர்தன ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.


Sri Lanka Rupee Exchange Rate