உறைநிலையில் இருந்த கருவகத் திசுக்கள் மூலம் குழந்தை பெற்ற பெண்
சிறுபிராயத்தில் அகற்றப்பட்டு உறைநிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த கருவகத் திசுக்களை மீள உடலில் பொருத்திக்கொண்ட பெண் ஒருவர் குழந்தை பெற...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_266.html
சிறுபிராயத்தில் அகற்றப்பட்டு உறைநிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த கருவகத் திசுக்களை மீள உடலில் பொருத்திக்கொண்ட பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ளார்.
பெல்ஜியத்தைச் சேர்ந்த இந்தப் பெண் சிறுமியாக இருந்தபோது, அவரது பக்குவமடையாத கருவகத் திசு அகற்றப்பட்டு, உறைநிலையில் பாதுகாக்கப்பட்டது.
புற்றுநோய் மற்றும் ஏனைய நோய்களுக்கான சிகிச்சையின் போது, கருத்தரிக்கும் திறனை இழக்கக்கூடிய ஆயிரக்கணக்கான பெண்கள் கர்ப்பம் தரிக்க இந்த நடைமுறை உதவும் என்று மருத்துவர்கள் பாராட்டியுள்ளனர்.
இந்த வகையான சிகிச்சைகளுக்கு இதுவரை காலத்தில், வேறு பருவமடைந்த பெண்களின் கருவகத் திசுக்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், சிறு வயதிலேயே நீக்கப்பட்ட பக்குவமடையாத கருவகத் திசுக்களை உறைநிலையில் பாதுகாத்து வைத்து, அதனை மீள உடலில் பொருத்துவது, இதுதான் முதல் தடவையாகும்.