சமையல்காரன் மகன் இன்று கோடீஸ்வரன்: இது ரொனால்டோவின் கதை
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு படம் விரைவில் வெளிவரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை பிரிட்டிஷ் அகாடமி விருது ...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_884.html
இதனை பிரிட்டிஷ் அகாடமி விருது பெற்ற இயக்குனர் பிரைட்டன் அண்டோனி வோன்க் இயக்கப் போவதாகவும், ரொனால்டோவே இந்த படத்தை தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்த்துக்கல் நாட்டில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சாதாரண சமையல்காரர். இவரது தாய் நகராட்சி ஒன்றில் பூங்காக்களை பராமரிக்கும் வேலையில் இருந்தார்.
ரொனால்டோ ஏழை குடும்பத்தில் பிறந்தாலும், தனது கால்பந்து திறமையால் உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீரராக உருவெடுத்துள்ளார். இவரது ஆண்டு வருமானம் சுமார் ரூ.600 கோடிக்கும் மேல்.
ஏழ்மை நிலையில் இருந்து உயர்ந்துள்ள ரொனால்டோவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தான் இந்தப் படம் எடுக்கப்படவுள்ளது.
11 வயதாக இருக்கும் போது தந்தையின் இழப்பு, ரொனால்டோவின் தாயார் குழந்தைகளை வளர்க்கபட்ட கஷ்டங்கள், கால்பந்து வீரராக உருவானவிதம், மான்செஸ்டர் யுனைடெட்டில் ரொனால்டோ சந்தித்த சவால்கள், ரியல்மாட்ரிட்டில் இணைந்த விதம், மெஸ்ஸியினால் ரொனால்டோவின் புகழுக்கு வந்த நிலைமை என அனைத்தும், படமாக காட்சிப்படுத்தப்படவுள்ளது.