நெடுஞ்சாலையில் லொறியை கிழித்துகொண்டு குதித்து ஓடிய வாலிபர்கள்: பொலிசார் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படங்கள்
பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டை சேர்ந்த நபர்களை பொலிசார் கையும் களவுமாக பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_859.html
தென்மேற்கு இங்கிலாந்தில் Gloucestershire என்ற நகருக்கு அருகில் உள்ள Bourton பகுதி சாலையில் நேற்று நற்பகல் மிக நீண்ட லொறி ஒன்று சென்றுக்கொண்டு இருந்துள்ளது.
மஞ்சள் நிறத்தில் முழுவதுமாக மூடப்பட்ட நிலையில் A429 என்ற சாலையில் சென்றுக்கொண்டிருந்த அந்த லொறி, சிக்னலுக்கு Cotswolds என்ற பகுதியில் நின்றுள்ளது.
அப்போது, லொறியின் பக்குவாட்டு பகுதியை உள்புறமாக கிழித்துக்கொண்டு ஒரு வாலிபர் வெளியே குதித்துள்ளார்.
சில நிமிடங்களுக்கு பின்னர், அந்த துளைக்கு அருகே மற்றொரு துளையை லொறியின் உள்ளே இருந்து போட்ட இரண்டாவது நபரும் வெளியே குதித்துள்ளார்.
பின்னர், இரண்டு துளைகளிலிருந்து வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் குதித்து அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்று மறைந்துள்ளனர்.
சாலையில் சிக்னலுக்கு லொறி அருகில் நின்று இருந்த வாகன ஓட்டிகள் இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்து தனது கைப்பேசியில் இந்த காட்சியை படமாக்கியதுடன் பொலிசாருக்கும் தகவல் அளித்தனர்.
ஹெலிகாப்டர், மோப்ப நாய்களுடன் வந்த பொலிசார், அந்த பகுதி முழுவதையும் சல்லடை போட்டு தேடினர்.
லொறியில் இருந்து 8 நபர்கள் குதித்து ஓடியதாக வாகன ஓட்டிகள் கூறியது பொலிசாருக்கு மேலும் உதவியாக இருந்தது.
ஹெலிகாப்டர் உதவியுடன் அந்த பகுதி முழுவதையும் தேடியதில், லொறி ஓட்டுனர் உட்பட 9 பேரை பொலிசார் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட லொறி ரோமானியா நாட்டை சேர்ந்ததாக பதியப்பட்டுள்ளதை பொலிசார் கண்டுபிடித்தனர்.
லொறியில் பிரித்தானியாவிற்குள் நுழைய முயற்சித்து கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேற வந்தவர்களா என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.