டி.வியை தள்ளிவிட்ட குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்: நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு
ஈகுவேடர் நாட்டில் எதிர்பாராத விதமாக தொலைக்காட்சி பெட்டியை தள்ளிவிட்ட குழந்தையை கொடூரமாக கொன்ற தாயாருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_404.html
Andean மாகாணத்தில் உள்ள Chimborazo என்ற நகரத்தில் Rosa L என்ற பெண் ஒருவர் தனது 3 வயது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் தாயார் வீட்டில் உள்ள தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருக்கும்போது அங்கு வந்த அவரது குழந்தை எதிர்பாராத விதமாக தொலைக்காட்சி பெட்டியை தள்ளி விட்டுள்ளது.
இதனால் ஆத்திரமான அந்த தாயார், சிறிதும் தயக்கமின்றி தன்னுடைய மகளின் கழுத்தை நெரித்து மூச்சை திணறடித்து கொன்றதாக கூறப்படுகிறது.
குழந்தை இறந்தவிட்டதை அறிந்ததும் அதன் உடலை வீட்டிற்குள்ளேயே புதைக்க முயற்சி செய்துள்ளதையும் அவரை கைது செய்த பொலிசார் கண்டுபிடித்தனர்.
விசாரணையின் போது அந்த பெண்ணிற்கு எந்தவிதமான மனநல நோயும் இல்லை என மருத்துவர்கள் பொலிசாரிடம் தெரிவித்திருந்ததால், அவர் சுயநினைவுடன் தான் இந்த கொலையை செய்தார் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று Andean நீதிமன்றத்திற்கு வந்தபோது பேசிய நீதிபதிகள், பெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி கொடூரமாக கொன்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே குற்றவாளிக்கு 34 வருடங்கள் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாக உத்தரவிட்டனர்.


Sri Lanka Rupee Exchange Rate