இரானின் அணுத்திட்டம்:அமெரிக்க-இஸ்ரேல் மோதல் வலுக்கிறது
இரானின் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகத்துக்கும் இஸ்ரேலியத் தலைவர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவுக்கும் இடையேயான...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_736.html
இரானின் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகத்துக்கும் இஸ்ரேலியத் தலைவர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவுக்கும் இடையேயான மோதல் வலுத்து வருகிறது.

இரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையை, உலகத் தலைவர்கள் கைவிட்டுள்ளனர் என்று நெத்தன்யாஹூ குற்றஞ்சாட்டியதை அடுத்தே இந்த மோதல் வலுத்துள்ளது.
ஜெரூலசலத்துக்கு வெளியே ஒரு இடத்தில் உரையாற்றியபோதே இந்தக் குற்றச்சட்டை அவர் வைத்தார். இரானின் அணுத்திட்டம் ஏற்படுத்தியுள்ள பெரும் அபாயத்தை தடுக்க வேண்டியது தனது கடமை என்று அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய நெத்தன்யாஹு கூறினார்.
ஆனால் இரானுடனான சர்வதேசப் பேச்சுவார்த்தைகள் இஸ்ரேலைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவி புரிந்துள்ளது என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி வாஷிங்டனில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அடுத்த வாரம் நெத்தன்யாஹு அவர்கள், அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சித் தலைவர்களின் அழைப்பின் பேரில் உரையாற்றத் திட்டமிட்டுள்ளது இருநாடுகளுக்கும் இடையே மேலும் உரசல்களை ஏற்படுத்தியுள்ளது