முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் சந்திரானந்த டி சில்வா இன்று காலமானார்.
முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் சந்திரானந்த டி சில்வா இன்று அதிகாலை காலமானார். தனது 78 வயதில் உயிரிழந்துள்ள அவர், 1982 ஆம் ஆண்டு தேர்த...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_888.html

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் சந்திரானந்த டி சில்வா இன்று அதிகாலை காலமானார்.
தனது 78 வயதில் உயிரிழந்துள்ள அவர், 1982 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
இதன் பின்னர், சில அரசாங்கங்களின் கீழ் அரசாங்க அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேர்தல் முறைக்கு அமைய சந்திரானந்த டி சில்வாவின் பதவிக்காலத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
பொதுத் தேர்தல் சட்டமூலத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவது விருப்பு வாக்கு முறையிலான தேர்தல் 1988 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போதும் சந்திரானந்த டி சில்வாவே தேர்தல் ஆணையாளராக இருந்தார்.
முன்னாள் தேர்தல் ஆணையாளரின் இறுதி கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்


Sri Lanka Rupee Exchange Rate