சிறிலங்காவில் பாரிய பண மோசடியில் ஈடுபட்ட பசில் ராஜபக்ஷ வியட்நாமில் பதுக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பி...
சிறிலங்காவில் பாரிய பண மோசடியில் ஈடுபட்ட பசில் ராஜபக்ஷ வியட்நாமில் பதுக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர், அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்ற பசில் ராஜபக்ச தற்போது வியட்நாமில் இருப்பதாக தெரியவருகிறது.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் குறித்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளிடம் தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் பசில் ராஜபக்சவை சிறிலங்காவுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்த போவதாக அரசாங்கம் கூறியது. இப்படியான சூழ்நிலையிலேயே அவர் வியட்நாம் சென்றுள்ளார்.
இது சம்பந்தமாக நேற்று நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிட்ட அமைச்சர் ஹர்ச டி சில்வா, பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு வியட்நாம் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
மஹிந்த ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களிலும் பெருந்தொகை பணத்தை பசில் ராஜபக்ச தரகு பணமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கிராமங்களில் வீதிகளை நிர்மாணிப்பது, அதிவேக நெடுஞ்சாலை உட்பட பாரிய அபிவிருத்தித் திட்டங்களில் பசில் ராஜபக்ச, மோசடியான முறையில் பணத்தை பெற்றுள்ளமைக்கான போதுமான சாட்சியங்கள் இருப்பதாக தெரியவருகிறது.