இளைஞர் சமுதாயம் மார்க்க கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும் – ஹிஸ்புல்லாஹ்
தற்போதுள்ள இளைஞர் சமுதாயம் டுவிட்டர்களிலும் பேஸ்புக்குகளிலும் காலத்தை கடத்துகின்றனர் இவர்கள் மார்க்க கல்வியிலும் கவனம் செலுத்த வேண்...


டுவிட்டர்களிலும் பேஸ்புக்குகளிலும்
காலத்தை கடத்துகின்றனர் இவர்கள் மார்க்க கல்வியிலும் கவனம் செலுத்த
வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான
எம்.எல்.ஏ. எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடி அல் மத்ரஸதுல்
இப்றாகிமிய்யா குர்ஆன் மத்ரஸாவில்
19வது பரிசளிப்பு விழா அதன் தலைவர் கே.எம் எம் அபுல் ஹசன் தலைமையில்
வெள்ளிக்கிழமை (20.3.2015) நடைபெற்ற போதே முன்னாள் பிரதியமைச்சர்
ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில் மார்க்க கல்வியுடன் சேர்த்து ஏனைய உலக கல்வியையும் கற்கவேண்டும் ஏனெனில் பிள்ளைகளின் ஒழுக்க விழுமியங்கள்,மார்க்கஅறிவு,பெரியோரை மதிக்கும் தன்மை அப்போது தான் பேணப்படும் வெறுமனே உலக கல்வியைமாத்திரம் கற்பதால் ஏற்படாது
எனவும் இப்றாகிமிய்யா குர்ஆன் மத்ரஸா அதன்
நிறுவாகத்தினரால் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது இது
தொடர்ந்து இடம்பெறவேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வுக்கு விஷேட சொற்பொழிவாளராக அஷ்ஷேய்ஹ் ஸெட்.எம். பாஸில் முப்தி குர்ஆன் ஓதுவதன் மகிமைதொடர்பாக உரையாற்றினார் .ஐமியத்துல் பலாஹ் சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ
ஜி.எம் அமீன் பலாஹி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள்
சம்மேளன தலைவர் எம்.ஐ எம் சுபைர் மஸ்ஜிதுல் மீராஜும் ஆபள்ளிவாயல் பேஸ் இமாம் எம். ஐ.ஆதம் லெவ்வை பலாஹி
குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்திசங்க பரிசோதகர் எச்.எம்.எம் சாஐஹான்
பலாஹி உட்பட உலமாக்கள் மற்றும் நிருவாகிகள் கலந்து கொண்டனர்.
குர்ஆனை கற்பித்த முஅல்லிம்களான
எம்.எஸ்.எம் அப்துல்லா மற்றும் எம்.ஏ.எம்அன்பாஸ் ஆகியோருக்கு
அன்பளிப்புகள் பாராளுமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்டதுடன் குர்ஆன்
பரீட்சையில் சித்தி எய்திய 36 மாணவர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுச்
சின்னங்களும் இதன் போது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.