நிதியமைச்சர் ரவி காணியை பலவந்தமாக பிடித்துள்ளதாக பிரதமரிடம் முறைப்பாடு
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, காணி ஒன்றை பலவந்தமாக கைப்பற்றியுள்ளதாக கூறி, ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியின் த...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_808.html

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, காணி ஒன்றை பலவந்தமாக கைப்பற்றியுள்ளதாக கூறி, ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் முறைப்பாட்டு கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்.
முறைப்பாட்டை கையளித்த பின்னர், ஊடகங்களிடம் பேசிய ஜோன் பெர்ணான்டோ எந்த இந்த நபர், தனக்கு சொந்தமான காணியை அமைச்சர் பலவந்தமை கையகப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
இது குறித்து தேடிப்பார்த்து நியாயத்தை நிறைவேற்றுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசிய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, தூய்மையான நிர்வாகமே தனக்கு தேவை எனக் கூறியுள்ளார்


Sri Lanka Rupee Exchange Rate