லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் மகனிற்கு மரண தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உள்நாட்டு போர்க்குற்றங்களில் ஈடுப்பட்ட குற்றங்களுக்காக லிபியா நாட்டின் முன்னாள் அதிபரான முயம்மர் கடாபியின் மகனிற்கு அந்நாட்டு நீதிமன்றம் மர...


உள்நாட்டு போர்க்குற்றங்களில் ஈடுப்பட்ட குற்றங்களுக்காக லிபியா நாட்டின் முன்னாள் அதிபரான முயம்மர் கடாபியின் மகனிற்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2011ம் ஆண்டு லிபியாவின் அதிபராக கடாபி இருந்தபோது உள்நாட்டு யுத்தம் வெடித்து பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
இப்போரில் கலவரக்காரர்களால் கைது செய்யப்பட்ட கடாபி, பொது இடத்தில் கொடூரமாக கொல்லப்பட்டார்.
இந்த புரட்சியின் போது கடாபியின் மகனான Saif al-Islam என்பவர் போர்க்குற்றங்களில் ஈடுப்பட்டதாக புகார் கூறப்பட்டது.
சைய்ஃப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மீதுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால், அந்நாட்டு நீதிமன்றம் இன்று சைய்ஃபிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தற்போது Zintan என்ற நகரில் முன்னாள் கலவரக்கார அமைப்பால் சிறைபிடிக்கப்பட்டுள்ள சைய்ஃப் நீதிமன்றத்திற்கு வராமலே இணையத்தளம் மூலமே வாக்குமூலம் அளித்துள்ளார்.
கலக்காரர்களின் பிடியில் சிக்கியுள்ள சைய்ஃபை விடுவிக்க மறுப்பதுடன், நீதிமன்றத்தில் அவரை ஒப்படைக்கவும் மறுத்துள்ளனர்.
கடாபியின் மகனிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும், அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அவருக்கு முழு வாய்ப்பு அளிக்கப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.