தென்கொரியா, சீனா, ஜப்பான் மாநாடு நடத்த இணக்கம்
தென்கொரியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் முதற்தடவையாக நேரடிச் சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_132.html

தென்கொரியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் முதற்தடவையாக நேரடிச் சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பெரும்பாலும் குறியீட்டளவான சந்திப்பாகவே இந்தக் கூட்டம் அமைந்துள்ளது.
இந்த சந்திப்பின் பின்னர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வெளியுறவு அமைச்சர்கள் மூன்று நாடுகளின் தலைவர்களும் பங்கெடுக்கின்ற மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக உறுதியளித்துள்ளனர்.
ஆனால், மாநாட்டுக்கான கால அட்டவணை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
அதேநேரம், இந்த மாநாட்டை ஒழுங்கு செய்வதற்கு முன்னதாக, இரண்டாம் உலகப்போரின் 70வது ஆண்டுநிறைவின்போது ஜப்பான் என்ன சொல்ல திட்டமிட்டுள்ளது என்பதை அறிந்துகொள்வதற்காக சீனா காத்திருக்கும் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகின்றது.
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் வலிந்து படையெடுப்புக்கு வந்ததாகக் கருதும் சீனாவும் தென்கொரியாவும், ஜப்பான் அதற்காக பரிகாரம் காண மறுக்கின்றமை தொடர்பில் கோபத்துடன் இருப்பதாக கூறப்படுகின்றது.


Sri Lanka Rupee Exchange Rate