யாழ். வசாவிளான் காணிகளை பார்க்கச் சென்றவர்கள் தடுக்கப்பட்டனர்'
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள வசாவிளான் பகுதியில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_569.html

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள வசாவிளான் பகுதியில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு தமது காணிகளைப் பார்வையிடச் சென்ற மக்களுக்கு இராணுவத்தினர் அனுமதி வழங்க மறுத்துவிட்டார்கள் என்று அங்கு சென்று திரும்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தமது காணிகளைப் பார்வையிடுவதற்காக ஆவலோடு சென்ற தாங்கள் பெரும் ஏமாற்றமடைந்ததாகவும் தங்கள் காணிகளைச் சுற்றி இராணுவத்தினர் புதிதாக முட்கம்பி வேலி அமைப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.வசாவிளான் பகுதியில் உள்ள ஜே-244, ஜே-252 ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளுக்கு மக்கள் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்து அந்த மக்கள் தங்களுடைய சொந்தக் காணிகளைப் பார்வையிடுவதற்காக அந்தப்பகுதிக்குப் பொறுப்பான பிரதேச செயலாளரினால் அங்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்தப் பகுதியில் ஆயிரம் எக்கர் காணி பொதுமக்களிடம் கையளிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்ததுடன் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்காக தமது காணிகளைப் பார்வையிடவும் அவற்றை அடையாளப்படுத்துவதற்கும் சென்ற மக்களுக்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சனை தொடர்பில் இராணுவத்தினரின் அதிகாரபூர்வ கருத்துக்கள் உடனடியாக கிடைக்கப்பெறவில்லை.


Sri Lanka Rupee Exchange Rate