இரான் அணுசக்தி விவகாரம்: தீர்வு சாத்தியமே என்கிறார் ரூஹானி

இரானிய அதிபர் ஹஸ்ஸான் ரூஹானி இரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான நெடுங்கால சர்ச்சைக்கு தீர்வு ஒன்றைக் காண அண்மையில் இரான் அமெரிக்காவுடனு...

இரானிய அதிபர் ஹஸ்ஸான் ரூஹானி
இரானிய அதிபர் ஹஸ்ஸான் ரூஹானி
இரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான நெடுங்கால சர்ச்சைக்கு தீர்வு ஒன்றைக் காண அண்மையில் இரான் அமெரிக்காவுடனும் பிற உலக வல்லரசுகளுடனும் நடத்திய பேச்சுவார்த்தை வழிவகுக்கலாம் என இரானிய அதிபர் ஹஸ்ஸான் ரூஹானி தெரிவித்துள்ளார்.தீர்க்க முடியாத பிரச்சினையென்று எதுவுமே இல்லை என அவர் கூறியதாக செய்திகள் மேற்கோள்காட்டுகின்றன.

அணுசக்தி விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான காலக்கெடு முடிவடைய இன்னும் பத்து நாட்களே எஞ்சியுள்ள நிலையில் ரூஹானியின் இக்கருத்து வெளிவருகிறது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் எவ்வகையில் முன்னேற்றம் காணுகின்றன என்பது பற்றி பிரிட்டிஷ் பிரஞ்சு மற்றும் ஜெர்மானிய வெளியுறவு அமைச்சளுக்கு அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி இன்று பின்னேரம் விளக்கமளிக்கவுள்ளார்.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இத்தருணத்தை நழுவ விடாமல் ஒப்பந்தம் ஒன்றை எட்ட இரான் முயல வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

Related

உலகம் 8130018203644754705

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item