சட்டவிரோதமாக குடியேற வந்த கும்பல்: மொடல் அழகிகளின் கமெராவில் பதிவான காட்சிகள் (வீடியோ இணைப்பு)
மியாமி கடற்கரையில் மொடல் ஷூட்டிங் செய்து கொண்டிருந்த இரண்டு பெண்கள் சட்டவிரோதமாக குடியேற வந்தவர்களை படமெடுத்துள்ளனர். மியாமி கடற்கரையில் இ...


மியாமி கடற்கரையில் மொடல் ஷூட்டிங் செய்து கொண்டிருந்த இரண்டு பெண்கள் சட்டவிரோதமாக குடியேற வந்தவர்களை படமெடுத்துள்ளனர்.
மியாமி கடற்கரையில் இரண்டு பெண்கள் மொடல் ஷூட்டிங் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது கரைக்கு ஒதுங்கிய ஒரு படகில் இருந்து சிலர் இறங்கி வேகமாக கரை நோக்கி ஓட்டமெடுத்துள்ளனர்.
ஷூட்டிங் எடுத்துக் கொண்டிருந்த போது கமெராவிலேயே இந்த காட்சிகளும் பதிவாகியிருந்தது.
முதலில் ஸ்கூபா டைவ் செய்பவர்கள் என எண்ணியிருந்த மொடல் பெண்களுக்கு, வந்தவர்கள் கரை நோக்கி வேகமாக ஓடுவதைக் கண்டதும் அவர்கள் சட்டவிரோதமாக குடியேற வந்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் கடற்கரை வழியே குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக குடியேற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவில் ஏற்கனவே உள்ள போதைப்பொருள் கடத்தல் பிரச்சனைகளுக்கு நடுவே சட்ட விரோதமாக குடியேறுபவர்களை தடுக்கும் நடவடிக்கையிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.