வெலே சுதா விடுதலையாகியிருந்தால் அவருக்கும் வேட்பு மனு கிடைத்திருக்கும்: சோபித தேரர்
போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வெலே சுதா விடுதலையாகி இருந்தால் அவருக்கும் வேட்புமனு வழங்குவது இந்நாட்டு அரசியல் ...


போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வெலே சுதா விடுதலையாகி இருந்தால் அவருக்கும் வேட்புமனு வழங்குவது இந்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு அவ்வளவு பெரிய பிரச்சினை அல்ல என நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.ஊழல் மோசடி குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எந்த கட்சியில் வேட்புமனு வழங்கப்பட்டாலும் தான் ஒரு போதும் அதனை அனுமதிக்கமாட்டேன் என அவர் கூறியுள்ளார்.
சிறந்த சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக தான் மேற்கொண்டிருந்த போராட்டம் வீண் செயலாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதற்கிடையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கிய பேராசிரியர் சரத் விஜேசூரிய, மஹிந்த ராஜபக்ச உட்பட் குழுவினரை தொடர்ந்து தோற்கடிப்பதற்கு தனது ஆதரவை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.