தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் ;பேச்சுவார்த்தை ஆரம்பம்

எதிர்வரும் பொது தேர்தலின் முடிவு என்னவாக இருந்தாலும் தேர்தலின் பின்னர் குறிப்பிட்ட காலப்பகுதி வரை தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஐக்கிய ...


எதிர்வரும் பொது தேர்தலின் முடிவு என்னவாக இருந்தாலும் தேர்தலின் பின்னர் குறிப்பிட்ட காலப்பகுதி வரை தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் முக்கியஸ்தர்கள் சிலர் தற்போதே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த நாட்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்த முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் கூட்டணியின் முக்கியஸ்தர்கள் பேச்சுவாரத்தைகள் நடத்துவதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் துப்பு வழங்கும் வகையில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் களுத்துரை மாவட்ட வேட்பாளர் ராஜித சேனாரத்ன தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும், தேர்தலின் பின்னர் உருவாகுவது தேசிய அரசாங்கம் என குறிப்பிட்டிருந்தார்.

தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் உருவாக்குவதற்காக தற்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில் தேர்தல் நிறைவடையும் வரையில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை பாதுகாத்துக் கொள்வதற்காக கட்சி உள் வட்டாரத்தினுள் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பாவினால் கூட்டப்பட்ட மத்திய செயற்குழு கூட்டத்தில் ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, எம்.கே.டீ.எஸ்.குணவர்தன மற்றும் ஹிருணிக்கா பிரேமசந்திர ஆகியோரின உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் நீதிமன்ற உத்தரவினால் மத்திய செயற்குழு கூட்டம் இரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ராஜித சேனாரத்ன,

ஏதாவது ஒரு வகையில் தனது கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டால் தேர்தலின் பின்னர் உரிய முறையில் தனக்கு மீள கிடைக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி தேர்தலின் போதும் தனது கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டதாக கூறிய ராஜித சேனாரத்ன ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் மற்றும் இன்றி கட்சி உபதலைவர் பதவியும் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.(smr)

Related

தலைப்பு செய்தி 7394466637954055601

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item