குற்றச்செயல்களில் ஈடுபட்ட ராஜபக்ஷ குடும்பத்தினர் விரைவில் கைது!
குற்றச்செயல்களில் ஈடுபட்ட ராஜபக்ஷ குடும்பத்தினர் விரைவில் கைது செய்யப்படுவர் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். மஹிந்த ர...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_159.html
குற்றச்செயல்களில் ஈடுபட்ட ராஜபக்ஷ குடும்பத்தினர் விரைவில் கைது செய்யப்படுவர் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரையேனும் இதுவரையில் கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு விரைவில் பதிலளிக்கப்படும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்வது தொடர்பில் காட்டுச் சட்டங்களை அமுல்படுத்த முடியாது. மிகவும் நிதானமான முறையில் நுட்பமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தற்போது மக்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு கோருகின்றனர். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்வதாகத் தெரிவித்தே நாம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டோம்.
ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைக் கூட இதுவரையில் கைது செய்யவில்லை என குற்றம் சுமத்தப்படுகின்றது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பிலான பெறுபேறுகளை இன்னும் இரண்டு வாரங்களில் பார்க்க முடியும்.
காட்டுச் சட்டத்தின் ஊடாக எவரையும் கைது செய்து விசாரணை செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate