ISIS உடன் கை கோர்த்தது நைஜீரியாவின் போக்கோ ஹராம்
நைஜீரியாவிலும் அதற்கு அண்டை நாடுகளிலும் கடும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் போக்கோ ஹராம் போராளிக் குழு சிரியாவிலும் ஈராக்கிலும் இஸ்லாமிய தேசத...
http://kandyskynews.blogspot.com/2015/03/isis_9.html

நைஜீரியாவிலும் அதற்கு அண்டை நாடுகளிலும் கடும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் போக்கோ ஹராம் போராளிக் குழு சிரியாவிலும் ஈராக்கிலும் இஸ்லாமிய தேசத்தை உருவாக்கும் நோக்கில் போராடி வடும் ISIS உடன் கூட்டு சேர்ந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போக்கோ ஹராம் தலைவர் அபூபக்கர் ஷெக்கௌ இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஆடியோ செய்தி சனிக்கிழமை ஆன்லைனில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த ஆடியோ செய்தியில் பேச்சாளர் பதிவு செய்த செய்தியில் முஸ்லிம்களின் தலைவரான (Caliph) இப்ராஹிம் இப்ன் அவாட் இப்ன் இப்ராஹிம் அல் ஹுஸ்ஸெயினி அல் குராஷி என அழைக்கப் படும் ISIS தலைவர் அபு பக்கர் அல்பக்தாதியின் தலைமையையும் விசுவாசத்துடன் ஏற்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.
மேற்குலக ஊடகங்களால் சுதந்திரமாக இந்த ஆடியோ செய்தியின் நம்பகத் தன்மையை உறுதிப் படுத்த முடியாத போதும் ஜேம்ஸ்டவுன் அறக்கட்டளையின் தீவிரவாதக் குழுக்கள் தொடர்பான நிபுணரான ஜகோப் சென் குறித்த ஆடியோ பதிவு நம்பத் தகுந்தது என்றும் இதில் பேசியவர் ஷெக்கௌ தான் என்றும் உறுதிப் படுத்தியுள்ளார். இதேவேளை போக்கோ ஹராமின் இத்திடீர் முடிவு உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இது இவ்விரு குழுக்களுமே மேலும் வளர வழி வகுக்கக் கூடியது என்பதுடன் பூகோள ஜிஹாதி சமூகத்தில் ISIS இன் மிகப் பெரிய நட்பு அணியாகவும் போக்கோ ஹராம் திகழவுள்ளது என்றும் பூகோள ஜிஹாதி தலைமைக் குழுவாக (caliphate) ISIS மேலும் பல தீவிரவாதக் குழுக்களின் சட்ட ரீதியான அங்கீகாரத்தையும் பெறும் வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் சென் தெரிவித்துள்ளார்.
ஒரு மாதத்துக்கு முன்னர் தான் ISIS தொடங்கியிருந்த ஓர் டுவிட்டர் கணக்கில் இது தொடர்பில் ஊகங்கள் கசிந்திருந்ததுடன் இக்கணக்கைப் பரஸ்பரம் ISIS மற்றும் போக்கோ ஹராம் என்ற இரு குழுக்களுமே கையாண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate