குருநாகலை முஸ்லிம் குடும்பம் பயணித்த வேனில் மோதி மாவடிவேம்பு மாணவி உயிரிழப்பு. வேன் தீ வைக்கபட்டது.
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குப்பட்ட மாவடிவேம்பு பிரதான வீதியில் இன்று மாலை சுமார் 6 மணியளவில் இடம் பெற்ற வீதி விபத்தில் சுமார் 1...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_563.html

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குப்பட்ட மாவடிவேம்பு பிரதான வீதியில் இன்று மாலை சுமார் 6 மணியளவில் இடம் பெற்ற வீதி விபத்தில் சுமார் 16 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தததை தொடர்ந்து அங்கு சிறு பதட்ட நிலை தோன்றியுள்ளது.
குருநாகல் இருந்து வந்த முஸ்லிம் குடும்ப உறுப்பினர்கள் பயனித்தா வேன் குறித்த பெண்ணை மோதியதுடன் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு கூடிய பிரதேசவாசிகள் சாரதியை வெளியில் இழுத்து அடித்ததுடன் வாகனத்தையும் தீமூட்டி எரித்துள்ளனர்.
ஸ்தலத்திற்கு வந்த பொலிசார் சாரதியை கைது செய்ததுடன் நிலைமையை சுமூக நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.
சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் ஒன்பதாம் தரம் கல்வி கற்கும் சிவயோகன் யசோதா எனும் மாணவியே உயிரிழந்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate