லக்ஸ்மன் கிரியெல்லவிடம் பொலிசார் விசாரணை
சட்டவிரோத தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் சாந்தினி ...


சட்டவிரோத தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் சாந்தினி கொஹன்காகே ஆகியோரிடம் இன்று பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இருவரிடமும் கண்டி பொலிஸார் வாக்கு மூலங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.
இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் கெஹலிய ரம்புக்வெல்லவிடமும் வாக்கு மூலம் பதிவு செய்யபட உள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி அலைவரிசைகளின் செய்திக் காணொளிகளை பார்வையிடுவதற்கு நீதிமன்றில் அனுமதி பெற்றுக்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.