எனக்கு குழிவெட்டிய குழுவுக்கு கடவுள் பதில் கொடுப்பார் -மேர்வின
எனக்கு குழி வெட்டிய குழுவுக்கு கடவுள் 17ஆம் திகதி தகுந்த பதில் கொடுப்பார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_914.html
எனக்கு குழி வெட்டிய குழுவுக்கு கடவுள் 17ஆம் திகதி தகுந்த பதில் கொடுப்பார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தான் மக்களுக்கு செய்யும் சேவை ஒரு போதும் இடைநிறுத்த போவதில்லை என அவர் கூறியுள்ளார். அரசியல் ரீதியில் மக்களுக்கான சேவையை நிறைவேற்றவுள்ள நிலையில், கட்சிக்காக சிறைச்சாலைகளுக்கு சென்ற ஏற்பட்ட நிலை தனக்கு இன்னமும் கனவு போன்று உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்ச குடும்ப சக்கரத்தில் சிக்கிக்கொண்டதனால் தனக்கு வேட்பு மனு கிடைக்கவில்லை.
எனினும் மக்களுக்காக செய்யும் சேவையை ஒரு போதும் இடை நிறுத்தப் போவதில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.