வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் எதிர்வரும் சில தினங்களில் வழங்கப்படும்
பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் எதிர்வரும் சில தினங்களில் வழங்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கி...


பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் எதிர்வரும் சில தினங்களில் வழங்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.
தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்களை அகர வரிசையில் ஒழுங்குப்படுத்தும் பணிகள் இடம்பெற்று வருவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.
அகர வரிசையில் ஒழுங்கப்படுத்தப்பட்ட வேட்புமனுக்கள் இன்று (14) முதல் தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த வேட்புமனுக்களை தேர்தல்கள் ஆணையாளர் பரிசீலித்ததன் பின்னர் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கப்படவுள்ளன
ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை நேற்றுடன் நிறைவு பெற்றது.
225 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான இந்த தேர்தலில் 21 அரசியல் கட்சிகளும் 201 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை கையளித்துள்ளன.
22 தேர்தல் மாவட்டங்களையும் சேர்ந்த 6151 வேட்பாளர்கள் இம் முறை தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 792 ஆகும்.
கம்பஹா மாவட்டத்தில் 588 வேட்பாளர்களும், குருணாகல் மாவட்டத்தில் 468 வேட்பாளர்களும் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.