நீதிமன்றங்கள் இருப்பது மக்களுக்காக: நீதியமைச்சர்
கடந்த காலங்களில் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை தொடர்பில் மக்களுக்கு பாரிய சிக்கல்கள் இருந்ததாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ள...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_798.html
அரச சட்டத்தரணியின் வவுனியா உத்தியோகபூர்வ இல்லத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் இன்று கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நீதிமன்றம் மக்களுக்காகவே இருக்கின்றது. கடந்து போன காலங்களில் நீதிமன்ற வசதிகள், தேவைகள் தொடர்பில் பிரச்சினைகள் இருக்கவில்லை. ஆனால் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை குறித்து மக்களுக்கு பெரும் சிக்கல் இருந்தது.
சட்டத்தின் ஆட்சியை தற்காத்து கொள்ள முடியாத காரணத்தினால், முழு நாட்டு மக்களும் மூன்று தசாப்த காலத்திற்கு மேலாக துன்பங்களை அனுபவித்தனர்.
தற்போது வடக்கு, தெற்கு, மேற்கு என்று மக்களுக்கு பேதங்கள் இல்லாது சட்டத்தின் ஆட்சிக்குள் நாட்டு மக்கள் வாழும் உரிமைய அரசாங்கம் என்ற வகையில் எம்மால் உறுதிப்படுத்த கடமைப்பட்டுள்ளோம்.
நீதிமன்றத்தின் தேவை தொடர்பான பிரச்சினை எமக்கு இருக்கவில்லை. அதன் மீதான நம்பிக்கை குறித்தே பிரச்சினை இருந்தது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சுதந்திரமானதாக இருக்கவில்லை என்றால், நீதிமன்றத்திற்கு எவ்வளவு வசதிகளை வழங்கினாலும் அதில் பலனில்லை.
நீதிமன்றங்கள் இருப்பது நீதிபதிகளுக்காகவும் சட்டத்திரணிகளுக்காகவும் அல்ல. மக்களுக்காகவே நீதிமன்றங்கள் இருக்கின்றன எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கூறியுள்ளார்.