சிறுவர்களின் வாழ்க்கையை பாதுகாப்பானதாக்குவோம்: ரணில்
சிறுவர்களின் வாழ்க்கையை பாதுகாப்பானதாக்குவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிறுவர்களே நாட்டின் எதிர்காலம் என தெளிவாக இந...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_166.html
சிறுவர்களே நாட்டின் எதிர்காலம் என தெளிவாக இந்த புதிய அரசாங்கம் புரிந்துகொண்டுள்ளது.
எனவே சிறுவர்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முனைப்புடன் செயற்படும். சிறுவர் தொழிலாளர்களை ஒழிப்பதற்கு சர்வதேச ரீதியில் குரல் கொடுக்கும் நாடுகளில் இலங்கை முன்னணி வகிக்கின்றது.
வறுமை காரணமாக குழந்தைச் செல்வங்கள் வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்ற துரதிஸ்டவசமான நிலைமை நீடித்து வருகின்றது.
எனினும் சிறுவர்கள் வேலைகளில் ஈடுபடுத்தப்படுவனை தடுக்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகின்றது.
சிறுவர்களுக்கு தேவையான கல்வியை வழங்கி அவர்களின் வாழ்க்கையை செழிக்கச்செய்ய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் நடவடிக்கை எடுக்கும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதனை தடுக்கும் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.