சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்ததும் றக்பி வீரரின் ஜனாஸா தோண்டப்படும்

தெஹிவளை மையவாடிக்கு தொடர்ந்து பொலிஸ் பாதுகாப்பு பற்கள் உடைக்­கப்­பட்டு,  இடுப்பு, குதி காலின் எலும்­புகள் முறிக்­கப்­பட்டு தட்­டை­யான ...



தெஹிவளை மையவாடிக்கு தொடர்ந்து பொலிஸ் பாதுகாப்பு
பற்கள் உடைக்­கப்­பட்டு,  இடுப்பு, குதி காலின் எலும்­புகள் முறிக்­கப்­பட்டு தட்­டை­யான ஆயு­தத்தால் தாக்­கியும் கூரிய ஆயுதம் ஒன்­றினால் கழுத்துப் பகு­தியில் குத்­தியும் கொடூ­ர­மாக கொலை செய்­யப்­பட்­ட­தாக கூறப்­படும் பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் ஜனா­ஸாவை அடக்­கஸ்­த­லத்­தி­லி­ருந்து மீளவும் தோண்டி எடுத்து பிரேத பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்த குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் தீர்­மா­னித்­துள்­ளனர்.



இதற்­காக சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னையை குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் கோரி­யுள்ள நிலையில் அவரின் ஆலோ­சனை கிடைத்த பின்னர் அது தொடர்பில் மன்­றுக்கு அறிக்கை சமர்­பிக்­கப்­பட்டு  உடன் அனு­மதி பெற்­றுக்­கொள்­ளப்­படும் என பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­வித்­தன.

அது வரை வஸீம் தாஜு­தீனின் சடலம் அடக்கம் செய்­யப்­பட்­டுள்ள தெஹி­வளை, ஜும்ஆ பள்­ளி­வாசல் மைய­வா­டிக்கு தொடர்ச்­சி­யாக பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

2012 ஆம் ஆண்டு மே மாதம் வஸீம் தாஜுதீன் மர்­ம­மான முறையில் சட­ல­மாக மீட்­கப்­பட்ட போது அவரின் மரணம் விபத்து என தெரி­விக்­கப்­பட்­டது.

எனினும் சட்ட வைத்­திய அதி­கா­ரியின் அறிக்­கையின் பிர­காரம் அது ஒரு கொலை என தெரி­ய­வந்­துள்­ளது.

இந் நிலை­யி­லேயே சட­லத்தை மீண்டும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவது குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.

Related

இலங்கை 8762577600609903918

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item