சிவில் அமைப்புக்களுடன் பிரதமர் சந்திப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் சிவில் அமைப்புக்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். எதிர்வரும் பொதுத் ...

.jpg)
எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் ஆராயப்பட்டுள்ளது.
சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் தொழிற்சங்கங்களின் முக்கியஸ்தர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
கொழும்பு நகர மேயர் ஏ.ஜே.எம். முஸாம்மிலின் இல்லத்தில் நேற்று இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
மஹிந் ராஜபக்சவை தேர்தலில் தோற்கடிக்கும் வியூகங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக உத்தியோகப் பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்த சிவில் அமைப்புக்கள் இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.