மைத்திரியின் முடிவால் கடும் அதிருப்தியில் மேற்குலக இராஜதந்திரிகள்!
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி முடிவினால் மேற்குலக இராஜதந்திரிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளிய...

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி முடிவினால் மேற்குலக இராஜதந்திரிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியமை அடுத்து இந்நிலை ஏற்பட்டுள்ளது.
மைத்திரியின் இந்த முடிவு கொழும்பைத் தளமாக கொண்ட இராஜதந்திர சமூகத்துக்கு குறிப்பாக மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் அவர்களை நிலைகுலையச் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆட்சியில் பலமான இருந்த மஹிந்த ராஜபக்ஷை விரட்டியடிக்க மேற்குலக நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தன. இதற்காக கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவை களமிறக்கி மாற்றத்தை ஏற்படுத்தினர்.
இந்நிலையில் மீண்டும் மஹிந்தவின் பிரசன்னமானது மேற்குலக நாடுகளுக்கு கடும் அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மைத்திரி தலைமையிலான சிறிலங்கா அரசாங்கத்துடன் மேற்குலகுடனான இராஜதந்திர உறவுகள் வலுப்பெற்று வந்த சூழ்நிலையிலேயே, மீண்டும் மஹிந்தவை அதிகாரத்துக்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சிறிலங்காவுக்கு விஜயம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.