காதலியை பார்க்க பர்தா அணிந்து வந்த காதலர்: கைது செய்த பொலிஸ்
குவைத்தில் காதலியை பார்க்க காதலர் பர்தா அணிந்து சென்றுள்ளதை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். சமீபத்தில் குவைத்தில் உள்ள அல் இமாம் அல் சித்திக...


குவைத்தில் காதலியை பார்க்க காதலர் பர்தா அணிந்து சென்றுள்ளதை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
சமீபத்தில் குவைத்தில் உள்ள அல் இமாம் அல் சித்திக் மசூதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் பலியாகினர், 227 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனால் மசூதியை சுற்றி பொலிசார் பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளனர், இந்நிலையில் அப்பகுதியில் பர்தா அணிந்திருந்த நபர் ஒருவர் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தார்.
இதனைக் கண்டு சந்தேகம் அடைந்த பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், தனது காதலியை பார்ப்பதற்காக நிற்பதாகவும், அதனால் தான் பர்தா அணிந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.