ஈராக்கில் செல்போன் பயன்படுத்திய ஆண்களுக்கு சவுக்கடி தண்டனை

ஈராக்கின் மிகப்பெரிய நகரமான மொசூல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பிடித்து, தனிநாடு அமைத்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், அங்கு பல்வேறு க...


ஈராக்கின் மிகப்பெரிய நகரமான மொசூல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பிடித்து, தனிநாடு அமைத்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் சட்ட திட்டங்களை விதித்துள்ளனர். அதனப்டி, செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்கி வருகிறது. எனவே, அமெரிக்க கூட்டு படைகளுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் இடம் குறித்து யாராவது செல்போனில் தகவல் கொடுத்து விடுவார்கள் என்ற அச்சம் நிலவுகிறது.

அதையும் மீறி செல்போன் பேசுபவர்களுக்கு 30 சவுக்கடி தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதையும் மீறி செல்போன் பேசிய 5 ஆண்களுக்கு பொதுமக்கள் மத்தியில் சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இவை தவிர மேலும் 3 பெண்களின் கைகள் வெட்டி துண்டிக்கப்பட்டன. இவர்கள் செய்த குற்றம் குறித்து வெளியிடப்படவில்லை. கடந்த நவம்பர் மாதம் முதல் மொசூல் நகரில் அனைத்து டெலிபோன், செல்போன்களின் நெட்ஒர்க் முடக்கப்பட்டுவிட்டது

Related

உலகம் 8490635356871091105

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item