இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை 6 மாதம் தாமதமாக வெளியாகும்: ஐ.நா மனித உரிமை ஆணையம் அறிவிப்பு

இலங்கை ராணுவத்தின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை 6 மாதம் தாமதமாக வெளியாகும் என்று ஐ.நா அறிவித்துள்ளது.  இலங்கை ராணுவத்தின் போர்க்குற்ற விசார...

இலங்கை ராணுவத்தின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை 6 மாதம் தாமதமாக வெளியாகும் என்று ஐ.நா அறிவித்துள்ளது. 

இலங்கை ராணுவத்தின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை வெளியிடுவதை தள்ளி வைக்க வேண்டுமென ஐ.நா.,விற்கு, இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர சில தினங்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்தார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த சர்வதேச அமைதிக்கான கருத்தரங்கில் பேசிய அவர் "இலங்கை ராணுவத்திற்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிப்போரில், அத்துமீறல் எதுவும் நடைபெறவில்லை என, ராஜபக்சே அரசு கூறி வந்தது. ஆனால், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான புதிய அரசு, அத்துமீறல் நடந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளது. அதுகுறித்து, உள்நாட்டு அளவில் விசாரணை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இதற்கான பணிகள், இன்னும் இரு மாதங்களில் முடிவடைந்து, விசாரணை துவங்கி விடும். அதுவரை ஐ.நா., போர்க்குற்ற விசாரணை அறிக்கை வெளியீட்டை தள்ளி வைக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். 

இதுகுறித்து மனித உரிமைகள் ஆணையத்திற்கான ஐ.நா-வின் உயர் கமிஷனர் சையத் ராத் அல் ஹூசைன், அறிக்கையை தாமதமாக வெளியிடுவது என்பது மிகவும் கடினமான முடிவு. ஆனால் இலங்கை அரசால் கொடுக்கப்படும் அறிக்கையின் மூலம் கிடைக்கும் புதிய தகவல்கள் அறிக்கையை வலுப்படுத்தும் என்பதால் இந்த ஒரு முறை மட்டும் அறிக்கையை தாமதமாக வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். 

இதனால் மார்ச் 25-ம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த போர்க்குற்ற விசாரணை அறிக்கை செப்டம்பர் மாதம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

Related

இலங்கை 899813025852570473

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item