”இரத்தத்தால் எழுதப்பட்ட செய்தி” - 21 எகிப்தியரின் தலையை துண்டித்து ஐஎஸ்ஐஎஸ் எச்சரிக்கை [வீடியோ]

எகிப்தை சேர்ந்த 21 கிறிஸ்தவர்களின் தலையை துண்டித்த வீடியோ வெளியிட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.   சுமார் ஒரு மாதத்திற்கு ம...

எகிப்தை சேர்ந்த 21 கிறிஸ்தவர்களின் தலையை துண்டித்த வீடியோ வெளியிட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.
 
சுமார் ஒரு மாதத்திற்கு முன்னதாக எகிப்து நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் 21 பேரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் லிபியா நாட்டில் பணய கைதிகளாக பிடித்து சென்றனர். தற்போது 21 பேரையும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை செய்யும் ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டனர்.


 
 அந்த வீடியோ காட்சியில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 21 பேரையும் லிபியாவின் திரிபோலி மாகாணத்தில் உள்ள ஒரு கடற்கரைக்கு கூட்டிச் சென்று அங்கு அவர்களை கத்தி முனையில் மண்டியிட வைத்துள்ளனர். பின்னர் அனைவரையும் தீவிரவாதிகள் கத்தியால் தலையை துண்டித்து கொன்ற கொடூர காட்சி பதிவாகியுள்ளது.
 
இதற்கிடையில், ”சிலுவை குறியிட்ட தேசங்களுக்கு இரத்தத்தால் எழுதப்பட்ட செய்தி” என்று குறிப்பிடப்படுகிறது. மேலும், இந்த கடலில்தான் நீங்கள் பின்லேடனின் உடலை மறைத்து வைத்தீர்கள். அதற்கு பதிலாக இவர்களின் ரத்தத்தை இந்த கடலில் கலக்கிறோம்’ என்பதும் அந்த வீடியோ காட்சியில் இடம் பெற்றிருந்தது.
 
இது குறித்து கூறியுள்ள எகிப்து அதிபர் அப்தெல் பாதக் அல் சிசி, ‘இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு சரியான நேரத்தில் பாடம் புகட்டுவோம்” என்றார். மேலும், லிபியாவில் தீவிரவாதிகளை குறிவைத்து எகிப்து விமானப்படை தாக்குதல் நடத்தியது என்று எகிப்து நாட்டு ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Related

உலகம் 7826737653274824672

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item