நபிகளாரின் கேலிச் சித்திரத்தின் எதிரொலி ;பிரான்ஸில் குர்ஆன் பிரதிகள் விற்பனைஅதிகரிப்பு
ஃபிரான்ஸ் நாட்டில் திருக்குர்ஆன் பிரதிகளின் விற்பனை முன்எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ...

ஃபிரான்ஸ் நாட்டில் திருக்குர்ஆன் பிரதிகளின் விற்பனை முன்எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் ஜனவரி 7 அன்று பிரபல கேலிச் சித்திரப் பத்திரிகையான சார்லி ஹேப்டோவின் பாரிஸ் அலுவலகம் தாக்கப்பட்டது.
அதற்கு மறுநாள் முதல் விற்பனை சூடுபிடித்திருக்கிறது. திருக்குர்ஆன் பிரதிகள், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, இஸ்லாம் தொடர்பான வேறு இரு புத்தகங்கள் ஆகியவற்றின் விற்பனை அதிகமாகியிருக்கிறதாம்!
ஃபிரான்ஸ் லாப்ரோகர் நூல் நிலையத்தின் சமய நூல்கள் பிரிவின் அதிகாரி காரல் விக்டோரா ஃபிரான்ஸ் கல்ச்சர் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த அளவுக்கு இதற்குமுன் விற்பனை நடந்ததில்லை.
சிலர் வாங்குவதற்குப் பயப்பட்டாலும் பெரும்பாலோர் தைரியமாக வந்து வாங்கிச் செல்கின்றனர் என்றார்.
உண்மையில் இஸ்லாத்திற்குத் தொடர்பில்லாத வன்முறையைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர்.
திருக்குர்ஆனை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் மக்களிடம் இருப்பதாகவே நான் கருதுகிறேன் – என்று காரல் குறிப்பிட்டார்.
இதேமாதிரி விற்பனை 2012 செப்டம்பரிலும் இருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.
அதாவது நபி (ஸல்) அவர்களைக் கொச்சைப்படுத்தும் திரைப்படம் வெளியான பிறகு இதுபோன்ற விற்பனை இருந்தது.