தேசிய அரசாங்கமொன்றை அமைக்க பிரதமரும் ஜனாதிபதியும் இணக்கம்
புதிசய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இணங்கியுள்ளனர். எதிர்வரும் பாராளமன...

புதிசய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இணங்கியுள்ளனர்.
எதிர்வரும் பாராளமன்றத் தேர்தலின் பின்னர் இவ்வாறு தேசிய அரசாங்கமொன்றை அமைக்க இருவரும் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த தேசிய அரசாங்கத்தின் ஊடாக ஆட்சி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஒரு சில புரிந்துணர்வின் அடிப்படையில் தேர்தல் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜாதிக ஹெல உறுமய, ஜனநாயகக் கட்சி போன்றன தனியாக தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகவும் பின்னர் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தலைமை தாங்கி தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.