பதவி உயர்வு பெற்ற சரத் பொன்சேகா, ஜெயசூர்யாவுக்கு கைகொடுக்க மறுத்தது ஏன்..

பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு பெற்ற சரத் பொன்சேகா, இலங்கை கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுடன் கைகுலுக்க மறுப்புத் தெரிவித்துள்ள...


பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு பெற்ற சரத் பொன்சேகா, இலங்கை கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுடன் கைகுலுக்க மறுப்புத் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சின் மைதானத்தில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்தும் நிகழ்வு இடம்பெற்றது.

சரத் பொன்சேகா பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்பட்ட பின்னர், அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் அவருக்கு வாழ்த்துக் கூறினர்.

அமைச்சர்கள், அதிகாரிகள், படைத் தளபதிகள், உறவினர்கள், மற்றும் பிரமுகர்களுடன் அவர் கைகுலுக்கி, அவர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார்.

எனினும், கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, வாழ்த்துக் கூறி கைகுலுக்க முனைந்த போது, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சட்டென்று அடுத்த பக்கம் திரும்பிக் கொண்டதுடன் அவருடன் கைகுலுக்கவும் மறுத்து விட்டார்.

மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு, ஜெனரல் ஜெயத் ஜெயசூரிய உடந்தையாக இருந்தவர்.

இந்தநிலையில், ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய பங்கேற்கும் நிகழ்வுகளில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்று சரத் பொன்சேகா அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.தவி
முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!

Related

இலங்கை 3504071578048508503

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item