பதினாறு வருடங்கள் - இதேநாளில் பிரான்சில் பெரும் பேரழிவு!!
இன்று மார்ச் 24ம் திகதி 2015ஆம் ஆண்டு, ஜேர்மன்விங்க்ஸ் விமானம் அல்ப்ஸ் மலையில் வீழ்ந்து நொறுங்கி 150 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் இதே நாளில...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_470.html

இன்று மார்ச் 24ம் திகதி 2015ஆம் ஆண்டு, ஜேர்மன்விங்க்ஸ் விமானம் அல்ப்ஸ் மலையில் வீழ்ந்து நொறுங்கி 150 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் இதே நாளில் இன்றைக்குப் பதினாறு வருடங்கள் முன்னர், அதாவது மார்ச் 24ம் திகதி 1999 அன்று ஒரு பேரழிவு பிரான்சை உலுக்கி இருந்தது.
Chamonix-Mont-Blanc இல் இருந்து Vallée d'Aoste (Italie) வரை பிரான்சிற்கும் இத்தாலிக்கும் இடையிலுள்ள Mont-Blanc குகைப் பாதை நெடுஞ்சாலையில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. உள்ளே சென்ற ஒரு குளிர்பதனப் பாரஊர்தி, குகை நடுவில் தீப்பற்றிக் கொண்டதை அடுத்து, பெரும் இழப்புகள் ஏற்பட்டிருந்தன.
பெல்ஜியத்தில் இருந்து வந்த இந்தப் பாரஊர்தி, மார்ஜரினை ஏற்றி வந்திருந்தது. இதில் பற்றிக் கொண்ட தீ, மூன்று நாட்களாகத் தொடர்ந்து எரிந்தது. உள்ளே சிக்கிக் கொண்ட வாகனங்கள், எரிந்து சாம்பலாகின. நுழைவாயிலில் இருந்து 7 கிலோமீற்றர் தூரத்தில் இந்த விபத்து ஏற்பட்டது
.
இதில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் பலர் அடையாளம் தெரியாமலே இறந்துபோனார்கள்.
தீவிபத்தின் பின்னர் இந்தக் குகை திருத்தப்பட்டு மீண்டும் சேவைக்குத் திரும்ப மூன்று வருடங்கள் சென்றது. 11.6 கிலோமீற்றர் நீளம் கொண்ட இந்தக் குகைப்பாதை நெடுஞ்சாலை, 1965 ஆண்டு திறக்கப்பட்டது.
தீவிபத்தின் பின்னர் இந்தக் குகை திருத்தப்பட்டு மீண்டும் சேவைக்குத் திரும்ப மூன்று வருடங்கள் சென்றது. 11.6 கிலோமீற்றர் நீளம் கொண்ட இந்தக் குகைப்பாதை நெடுஞ்சாலை, 1965 ஆண்டு திறக்கப்பட்டது.


Sri Lanka Rupee Exchange Rate