இலங்கையின் முதல் முஸ்லிம், பெண் அதிபர் கௌரவிப்பு
சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_96.html
சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹசன் அலிக்கு அவரின் சொந்த ஊரான நிந்தவூரில் “முதுசத்துக்கு மகுடம்” பாராட்டு நிகழ்வு அண்மையில் (31) நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் இடம்பெற்றது.
இதில் இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் அதிபர் மைமுனா (நல்லம்மா டீச்சர்) அவர்கள் இராஜாங்க அமைச்சரிற்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா வழங்குவதையும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் ஆகியோர்களுக்கு பொன்னாடை போர்த்துவதையும், மு.கா தலைவர் பொன்னாடை போர்த்தி நல்லம்மா டீச்சர் அவர்களுக்கு முத்தமிடுவதனையும், படங்களில் காணலாம்.