அமெரிக்க டொலர்களை கடத்திச் செல்ல முயற்சித்தவர் கட்டுநாயக்கவில் கைது
சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத்தாள்களை நாட்டில் இருந்து எடுத்துச் செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு...


கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 85 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
இந்த நபர், வெளிநாட்டு நாணயங்களுடன் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுச் செல்லவிருந்த நிலையில் இன்று அதிகாலை 1.20 அளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
59 வயதான இந்த சந்தேக நபர் கொழும்பு ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் லெஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார்.