பள்ளி வாசலை மூடிய குழுவினரே இன்று இவ் முஸ்லிம் இளைஞர்களை தாக்கியுள்ளனர்.

ராஜகிரியவில் முஸ்லிம் இளைஞர்கள் மீது சிங்கள இளைஞர்கள் இன்று தாக்குதல் மேற்கொண்டதாக எமது இணையத்தின் கொழும்புச் செய்தியாளர் தெரிவித்தார். ...

ராஜகிரியவில் முஸ்லிம் இளைஞர்கள் மீது சிங்கள இளைஞர்கள் இன்று தாக்குதல் மேற்கொண்டதாக எமது இணையத்தின் கொழும்புச் செய்தியாளர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.

¬ராஜகிரிய கிரிடாபிட்டி வீதியில் தங்கியிருக்கும் முஸ்லிம் இளைஞர்களின் வீட்டுனுள் உள்நுளைந்த சிங்கள காடையர்கள் கற்கள் கொண்டு வீசியதுடன் அங்கிருந்த முஸ்லிம் இளைஞர்களையும் தாக்கியுள்ளனர்.

ராஜகிரிய கிரிடா பிட்டி வீதியில் அமைந்திருக்கும் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள வீட்டில் தங்கியிருக்கும் முஸ்லிம் இளைஞர்கள்; மீதே குடி போதையில் இருந்த சிங்கள காடையர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்

இவ்விளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கான பிரதான காரணம் கிரிடா பிட்டி பள்ளிசாலில் தொழுகை நடத்தப்பட்டமை என தெரியவருகின்றது.

2013ம் ஆண்டு கிரிடாபிட்டி வீதியில் இருந்த பள்ளி வாசலில் தொழுகை மேற்கொள்வதை தடுத்து பள்ளி வாசலை மூடிய குழுவினரே இன்று இவ் முஸ்லிம் இளைஞர்களை தாக்கியுள்ளனர்.

2012ம்; ஆண்டு மூடப்பட்டிருந்த இப்பள்ளிவாசலை இவ்விளைஞர்களே உயிர்ப்பித்து தொழுகை நடத்தியுள்ளனர். இதனை அவதானித்து வந்த பிரதேச சிங்களவர்கள் இப்பள்ளி வாசலில் தொழக் கூடாது என்று முஸ்லிம் இளைஞர்களை மிரட்டியதுடன் இவ்விடத்தை விட்டு செல்ல வேண்டும் என்றும் அச்சுறுத்தியிமுள்ளனர்.

இதன் காரணமாக இப்பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் இம் முஸ்லிம் இளைஞர்களும் ராஜகிரிய பொலிஸில் முறைப்பாடு செய்தனர். இருந்தும் பிரதேச சிங்களவர்களின் அதிக எதிர்ப்பு காரணமாக இப்பள்ளிவசாலில் தொழுகை நடத்துவது நிறுத்தப்பட்டதுடன் மாலை நேரங்களில் நடத்தப்பட்ட குர்ஆன் மத்ரஸாவும் மூடப்பட்டது.

இப்பள்ளி வாசல் மூடப்பட்ட தினத்திலிருந்து இம் முஸ்லிம் இளைஞர்களை இவ்வீட்டிலிருந்து அகற்றுவதற்கு இப்பிரதேச சிங்கள வாசிகள் கடும் முயற்சி செய்து வந்துள்ளனர்.

இவர்கள் இங்கிருந்தால் மீண்டும் தொழுகை ஆரம்பிப்பார்கள் என்பதே இவர்களை அகற்ற முயற்சித்து வந்துள்ளனர்.

இம் முஸ்லிம் இளைஞர்கள் வீதியில் நிற்கும் போது எமக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்ததா எனக் கேட்பதுடன் நாம் யார் என்று உங்களுக்கு காட்டுவோம் என அச்சுறுத்தி வந்துள்ளனர்.

அத்துடன் முச்சக்கர வண்டிகளை எடுத்து வந்து முஸ்லிம் இளைஞர்கள் தங்கியிருக்கும் வீட்டினுள் முன் நிறுத்தி சிங்கள பாட்டுக்களையும் பௌத்த மதம் சம்மந்தமான பாட்டுக்களையும் மிகவும் சத்தமாக ஒலிபரப்பி வந்துள்ளனர்.

இம் முஸ்லிம் இளைஞர்களை காணும் போது அபே ரட்ட என உமிழ்ந்து துப்பி விட்டு செல்வது வழமையாக கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக சில முஸ்லிம் இளைஞர்கள் இவ்விடத்தை விட்டு சென்றுள்ளனர். (இவ் வீடானது இங்கு தங்கயிருக்கும் முஸ்லிம் இளைஞர்களின் உறவவினரது வீடாகும்)

இவ்வாறு நீடித்து வந்த இப்பிரச்சினை கடந்த சில மாதங்களாக இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த வாரம் குடிபோதையில் வந்த சில சிங்கள காடையர்கள் முஸ்லிம் இளைஞர்களை வம்புக்கு இழுத்ததுடன் அவர்கள் தங்கியிருக்கும் வீட்டினுள் உட்புகுந்து இவ்விடத்தை விட்டு எழும்ப வேண்டும் என அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதன் தொடர்;ச்சி இன்று மாலை 06 மணியளவில் வீட்டுனுள் புகுந்த ஒரு சிங்கள இளைஞன் கற்களை கொண்டு எறிந்ததுடன் முஸ்லிம் இளைஞர் ஒருவர் மீது அடித்துள்ளார்.

இதனைக் கண்ட மற்ற முஸ்லிம் இளைஞர்கள் கூச்சலிட சுற்றி நின்ற 06 சிங்கள காடையர்கள் வீட்டினுள் புகுந்து முஸ்லிம் இளைஞர்களை

தாக்க முற்பட்டுள்ளனர்.

இக் கைகலப்பு முற்ற தங்களை சுதாகரித்துக் கொண்டு ஓடிய இரு முஸ்லிம் இளைஞர்கள் ராஜகிரிய வெலிக்கட பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் , மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி, மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானிடம்; தொடர்பினை ஏற்படுத்தியதாகவும் இவர்கள்; ராஜகிரிய பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் உடனடியாக பேசுவதாக குறிப்பிட்டதுடன் இவர்கள் செயலில் இறங்கியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் ராஜகிரிய பொலிஸ் நிலையத்திற்கு முஜீபுர்ரஹமான் நேடியாக விஜயம் செய்ததுடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் பேசி முறைப்பாட்டை பதிந்து விட்டுச் சென்றுள்ளார்,

Related

இலங்கை 7040499990228003599

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item